கடிதம் தந்த காதல் வலி
அவள் வசம் இருப்பவை இப்போது
யுத்தத்தில் அவன் அணிந்த உடைகள்
அவன் சட்டைப்பையில் இருந்த
அவள் அனுப்பிய கடைசி காதல் கடிதம்
துளைக்கப்பட்ட சட்டைப்பையில்
எதிரியின் தாக்கு அந்த கடிதத்தை
அழிக்கமுடியவில்லை ஏனெனில் ,
அதன் சாரம், அவள் காதல்,
அவன் உயிரோடு கலந்து விட்டது
அவளின் அந்த கடிதம்
அவன் கடைசி ஸ்பரிசம் கண்டது
அதில் இப்போது அவள்
அவனைக் கண்டு கண்ணீர்விடுகிறாள்