என் அழகே
கருவறையின் கனிவை கண்ணெதிரே
- தருகிறாய்.
மழலைச் சிரிப்பை திகட்டாமல்
- தெளிக்கிறாய்.
கணக்கிலா அழகிருந்தும் கர்வமின்றி
-ஒளிர்கிறாய் .
உறவுகளில் உண்மை தராசை
- உயர்த்துகிறாய் .
நாணத்தை உன்னுள் தேடியும் ஒளித்தே
-வைத்திருக்கிறாய் .
அடக்கத்தில் சற்றே மிடுக்கென
-மிளிர்கிறாய் .
பாவனை செய்தறியா வெகுளியென
-திகழ்கிறாய்.