பெண்ணே ஏன்
புறக்கண்ணால் புசித்த பெணகள்
- எத்தனையோ
மனக்கண்ணால் பூஜித்த பெண் நீ
- நீ மட்டுமே
உனையறியாது உனை தொடர்ந்து
-ரசித்தேனே
ஓரப்பார்வைக்கு ஏங்கி பெற்று
-மகிழ்ந்தேனே.
உன் கைப்பட்டு விழும் துகள் - பொக்கிஷமென்றேனே !
உள் வாங்கி விடும் மூச்சும் நீ தானே !
மன்னித்துவிடு மறந்துவிட்டு என்றாயே !
மரியன்னை மன்னிக்கலாம்
மகாவீரர் மன்றாடலாம்
இன்சா இரக்கப்படலாம்.
புத்தர் போதிக்கலாம்.
பெண்ணே
மனிதனை மகானாக மாற்றவேண்டாம் .
மண்ணாக மாற்றிவிட்டாயே !
மடிந்தாலும்
எரிசாம்பலும்
மன்னிக்காதே......