என் அம்மா

உலகறியா என் அன்னையே
உந்தன் உலகமே நான்தானே
என் நலன்கருதி நீ செய்த
தியாகங்கள் எண்ணிலடங்கா
என்னைவிட என்மீது அதிக அக்கரை
கொண்ட என் அன்புத்தாயே
தியாகத்தின் மொத்த உருவம் நீ
அன்பின் ஊற்றும் நீ
அமுதசுரபியும் நீ
பள்ளிக்கூடம் நான் செல்லும் முன்பே
என் பிஞ்சு விரல் பிடித்து
பாடம் கற்பித்த முதல் ஆசானும் நீ
எனக்காக உழைத்து உழைத்து
உடல் சோர்ந்து போனாய்
எனக்காக எல்லாம் செய்த
என் அன்பு சகியே
உனக்காக நான் என்செய்வேன்........