ஆறாம் மாதம்
பெண் குழந்தையாய் பிறந்து
மகளாய் வளர்ந்து
மனைவியாய் புகுந்து
மருமகளை வாழ்ந்து
இன்று நான் பெருமை கொண்டேன்
பெண்ணாய் பிறந்ததற்கு
என் வாழ்க்கையின் அர்த்தம் உருவாகியது
இப்பொழுது முப்பது நாட்கள்
என் வயிற்றில்
ஒரு நிமிடம் உணர்ந்தேன் என்னை கடவுளாக
தாயாகும் கர்வத்தில் .