காதல்

காதல் பிரிவால் தவிக்கும் ஆடவன்

தூக்கம் வரவில்லை,
துக்கம் அடைந்திருக்க.
ஆக்கம் எதுவுமில்லை,
நீக்கம் நிறைந்திருக்க,
தாக்கம் இருக்கதடி .
பார்க்கும் இடங்களிலெல்லாம்
பாதையே தெரியவில்லை.
பகலுக்கும் பகலவன் பிரிவுக்கும் வேற்றுமையில்லை.
கேட்கும் செய்திகள் சரியாய் செவிக்கு எட்டவில்லை.
கேள்விகளுக்கு பதில் அறியவில்லை.
என் நேசமது அர்த்தமின்றி தவித்திருக்க ,
என் தேசம் விட்டு சென்றவளே!
உன் பாசம் பருக துடிக்கதடி நெஞ்சம்.
என்னை வந்து சேர்வாயோ?

எழுதியவர் : சாருமதி (22-Feb-17, 10:07 am)
சேர்த்தது : சாருமதி
Tanglish : kaadhal
பார்வை : 139

மேலே