எங்கே என் தோழி
அவள் எப்படிநடந்தாலும்
என்னுடன் எப்படியோ பேசிவிடும்
அவள் கால் கொலுசுகள்கூட இப்பொழுது
அவள் கடந்துசெல்லும்போது பேசுவதில்லை…
அந்த கொலுசுகள் எந்தன் தோழியென்று
அறிந்தவுடன் கழட்டி எறிந்துவிட்டாளா?
இல்லை அந்தகொலுசுகள் இசை நான்
கேட்காதவாறு இருக்க நடக்கப் பழகிவிட்டாளா?
இல்லை அந்த கொலுசுகளுள்ளும்
என்மீதான வெறுப்பைத் திணித்துவிட்டாளா?
என்தோழியல்லவா அவள் கால் கொலுசு
அவள் திணித்திருந்தாலும் நம்பியிராள்..
இவ்வகையான குழப்பத்தில் எண்ணங்களை
ஓடவிட்டுக்கொண்டிருக்கிறேன்…
என்றோ நான் கேட்ட என்தோழியான
கொலுசுகளின் இசையை நினைவுபடுத்தியவாறு…