வறுமை

i am coming from
plat form


ஏனோ தெரியவில்லை
ஏழையாய் நான் பிறந்தது,

பிறந்ததும்கூட புரியவில்லை,
என் தாயாரின் நிலை என்னவோ
ஏன் இப்படி என்று...

நாட்களின் வேகத்தில் புரிந்தது
ஆழமாய் அரையப்பட்டது

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

தாலாட்டும் வயதிலும்
தாய் மடியில் இல்லை,
தாகம் தீர்க்க
தண்ணீர்கூட இல்லை,

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

படுத்து உறங்க ஆசைப்பட்டேன்
ஏதோ ஒரு தெருவோரம்தான்,
அங்கும் விரட்டி அடிக்கப்பட்டேன்
சிலரின் காரணத்தால்...

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

வாழ்க்கை என்னும் வீட்டில்
சுற்றி இருக்கும் தூண்களாய்
வறுமை வறுமை.....


நான் வரைய நினைக்கும்
ஓவியங்கள் என்னவோ
என் கண்ணீராலே அளிக்கப்பட்டது...

காலக் கொடுமை என்னவோ
காலமெல்லாம் பட்டினியில் போனது..

உடுத்த உடை இல்லை
எங்கோ ஒரு ஊருக்கு செல்ல
காசுகூட இல்லை...

சுற்றி திரியும் என் கண்களுக்கு
பாதையெல்லாம்

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

தாகம் என்னவோ
கண்ணீராய்
சோகம் என்னவோ
கொடுமையாய்.....

கையேந்தி நின்றேன்
கையேந்தி பவன் எதிரிலும்

கொசு விரட்டுவதைப்போல்
விரட்டியடிக்கப்பட்டேன்
ஒன்றும் இல்லை என்று....

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

கதறி அழுத காலம் என்னவோ
என் தாயாரின் கொலம் கண்டு....

பட்டினி மட்டுமே என்றும்
எங்களுக்குள் விருந்தாய் உண்டு... 

தாகம் தீர்ந்ததுபோல்
படிக்க வேண்டும் என்ற
என் எண்ணமும்
ஒவ்வொரு நாளும்
செரிமாணமாய் போனது...


அதிசயமாய் என்னை
வேடிக்கை பார்க்கும் மக்கள்
சிரித்த முகத்துடன்
வரவேற்கும் என் கண்கள்...

விரட்டி அடிக்கும் என்னை பார்த்து
என் தெரு நாய்களும் குரைக்கிறது
நான் எவ்வளவு சுத்தாமானவன் என்று...

அஞ்சு பத்து சம்பாரித்தால்
கொடிஸ்வரனின் ஒருத்தனாய்
என் மனமாய்...

மண் வாசனை மட்டுமே
என் உடம்பில் தெளிக்கப்படும்
தினசரி நறுமணமாய்..


பள்ளிக்குச் செல்ல நகரும்
என் கால்களில்
குத்திய முள்ளாய்
மீண்டும் வறுமை வறுமை...


வீடு என்று ஒன்றுதான் இல்லை
திறந்த வெளி என்று பல உள்ளதே
கட்டி விடாதீர்கள் இங்கும்
உங்களின் ஆசையை கொண்டு..

தூக்கமே இல்லா வாழ்க்கையில்
என் வறுமையே காரணமாய்....


குளிர் சாதனப் பெட்டி என்று
எனக்கு முன்னாள் பல குப்பைதொட்டிதான்....


என்னுள் குளிர் காய வரும்
ஒவ்வொரு பருவங்களும்
நகர்ந்து செல்கிறது
என் வறுமையை கண்டு.....

உனக்கு ஒருநாள்தான் தெருக் கூத்து
எனக்கு பலநாள் தெரு சுத்து

அந்த ஒருநாள் உங்களுக்குள் பெருமையாய்
இந்த பலநாள் எங்களுக்குள்
வறுமையாய்......


ஒரு வேலை சோற்றிற்க்காக
பல வேளை கண்ணீரில்
நானும் என் தாயாரும்....

மீண்டும் வறுமை வறுமை....

குளிப்பதற்கும் குடிப்பதற்கும்
கிடைத்த வரமாய்
இறைவனின் மழை மட்டுமே....

நான் சென்ற வெகு
தூரப்பயணமாய்
நடை பயணம் மட்டுமே அதிசயமாய்....


மறு பந்தி என்று
எங்களுக்கு ஒன்று உண்டு!
மண்ணில் உங்களால்
கொட்டப்படும்
சோற்றுப் பருக்கை கொண்டு.....


கரை படிந்த பாத்திரங்களாய்
கரையாத கண்ணீராய்
மீண்டும் வறுமை வறுமை.....


அறிவியல் நிறைந்த உலகமா?
கருவியாய் நாங்கள் வீண் போவதாலோவா?
காரணம்

மீண்டும் வறுமை வறுமை......


கணினி கொண்டும்
நிலவரணம் செய்கிறார்கள்
எங்களை வைத்தும் பல
வியாபாரம் செய்கிறார்கள்

"மீண்டும் வறுமை வறுமை என்று!..."

  by

j.munofar hussain....

 

எழுதியவர் : munafar (22-Feb-17, 10:51 pm)
Tanglish : varumai
பார்வை : 3596

மேலே