உலக மாயை

வருடம் எண்ணாமல் படித்து
நிமிடம் எண்ணி
கத்தி வைக்கிறாள்
சுகப்பிரசவம் ஆக வேண்டிய தாய்க்கு..
அரசு மருத்துவமனையில் ..

வருடம் எண்ணாமல் படித்து
பணம் எண்ணி மனம் அலைந்து
கத்தி வைக்கிறாள்
சுகப்பிரசவம் ஆக வேண்டிய தாய்க்கு...
தனியார் மருத்துவமனையில்..

மருத்துவத்தை பணத்துவமாய் மாற்றி பார்க்கும் தனியார் மருத்துவமும்
மருத்துவத்தை மணித்துளியாய் மாற்றி பார்க்கும் அரசு ஊழியரும் ..
இல்லாத வரையில்..

மனிதன் நோயும் அறிய வில்லை ,,
சிசேரியனும் அறியாமல் பிறந்தது மழலை..

இன்றோ அனைத்தும் வர்த்தகம்..
வணிகம்..
அனுபவம்..

எங்கே போகுதோ உலகம்..

எழுதியவர் : பாதிமஷாஹூல்.. (23-Feb-17, 8:38 pm)
Tanglish : ulaga maiai
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே