வரிசைப் படுத்து

"எளிதில் ஏதும் கிடைக்காது "
என்கிறதிந்தச் சமுதாயம் ,
தனித்துவம் என்பதுன் சிறப்பு
அதை இழந்திடவேண்டாம்
சில சிறுசிறு வேட்கைக்கு

திறமைக்கே முன்னிடம் என்பதாலே,
தகுதிகளை வளர்த்தெடு முன்னாலே ,
இதுவும் விழிப்புணர்வென்பார்
தெரிந்து உணர்ந்தோரே..!

வரிசைப் படுத்துன் பொறுப்புக்களை ,
அதில் தோய்ந்து செயல்பட வெற்றிகள்
பலப்பல சேர்ந்திடும் விளைவாலே..!
பல பொறுப்புள்ள பெரியோர்
ஆக்கத்தினால் -பல
பொன்னான புரட்சிகள் ஆனதப்பா ..!

"செறிவெனப்படுவது
தான் கூறியது மாறாமை"
சொல்லுவது கலித்தொகை
நா ..நயம் மிக்கது நல்வாழ்வாகும்
நாணயம் என்றதை சொல்லுவர்தான் ,
வாழ்வின் நிறைவும் இதுதானே ..

வாழ்வாங்கு வாழ்தல் உண்டானால்
தெய்வத்துள் வைக்கப்படுவோம் ..
வள்ளுவத்தின் வலிமைவார்த்தை இது.
பயணப்படுவோம்.... பதற்றமில்லாதே,
பொறுப்பாய்,...விழிப்பாய்..,மகிழ்வுடனே...!!!.

எழுதியவர் : மின்கவி (24-Feb-17, 8:42 am)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 238

மேலே