சிவன்

சிவன்
ஆலகால விஷமதனை அருந்திய நீலகண்டன்
பிறை சூடிய பெம்மான் ஆனந்த கூத்தினை
ஆடிய வேகமதில் சடையாய் கூந்தல் விரிந்திட
ஊன்றிய காலதனில் கொடுமுயலகன் அடங்கிட
உடுக்கேந்திய கையதனில் மானும் மழுவும் ஆடிட
உயரிய காலதனில் உன்னத நடனகலை உயிர்பெற
அரையினில் புலித்தோலும் அங்கமெல்லாம் வெந்நீரும்
அழகிய கழுத்ததனில் அணிகலனாய் அரவமும் வீற்றிருக்க
தரணியாலும் திருக்கயிலை நாதனின் ஆடலை காண
கண் ஆயிரம் போதாது என அறிவீர் குவலத்தோரே..

எழுதியவர் : கே என் ராம் (27-Feb-17, 10:11 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 113

மேலே