சட்டம்

1954
திரை விலகியதும்
சிறை தெரிகிறது
கம்பிக்கு பின்னால் வெள்ளிங்கிரி

செய்யாத பாவத்திற்கு கம்பி எண்ணுகிறான்
அடுக்கடுக்கான பொய் வழக்குகள் நீள
திரை விழுகிறது அடுத்தக்காட்சிக்காக

கூண்டில் நிற்கிறான்
வாதங்கள் தொடர்கிறது
எப்போதும் போல ஜெயிக்கிறது
பொய்வழக்கு....

ஒப்பனை கலைகிறது
ஒத்திகை முடிந்தவுடன்,
சட்டம் என்ற நாடகம்

இன்று,
வீட்டின்
சுவரில் தொங்கியபடி
சட்டத்திற்குள்
நிற்கிறான்
ஒத்திகை இல்லாமல்
ஒப்பனை கலையாமல்....

எழுதியவர் : (27-Feb-17, 10:15 am)
சேர்த்தது : sanmadhu
Tanglish : sattam
பார்வை : 50

மேலே