படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பச்சைப் படர்ந்தபோதும்
மாறவில்லை
சிலையின் அழகு !

பாறையைச் செதுக்கி
சிலையாக்கினான்
சிறந்த சிற்பி !

கல்லில் கலைவண்ணம்
கண்டவன்
தமிழன் !

சிலைகள் சொல்வது
காலை மட்டுமல்ல
காலமும்தான் !

கண்ணின் புருவம்
விரல் நகம்
மிக நுட்பம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Feb-17, 4:54 pm)
பார்வை : 70

மேலே