உன்னை கண்ட பின்பு
தரணியினை ஆளப்பிறந்தவன்
என்று என்னை நினைத்தேன்
அன்பே உன்னை காணத வரை!
தரையில் கூட நிற்க முடியாமல்
தடுமாறுகிறேன்!
உன்னை கண்ட பின்பு!,
தீ என்னும் ஒற்றை பார்வையில்
ஆயிரம்பேரை எரித்தேன்
உன்னை காணாத வரை
நீர்குமிழியாய் தோன்றி நிற்க்கிறேன்!
உன்னை கண்ட பின்பு,
வார்த்தைக்கு ஒரு உச்சரிப்பை
கொடுத்தேன்!
உன்னை காணாத வரை!
வார்த்தையின்றி வாயடைத்து
நிற்க்கிறேன்
உன்னை கண்ட பின்பு,
மணமதையே மறுத்து நின்றேன்
உன்னை காணத வரை
மலர்களையே பார்த்து நிற்க்கிறேன்
உன்னை கண்ட பின்பு,
உரிமைகளே என்னவென்று
தெரியாமல் இருந்தேன்
உன்னை காணத வரை
உணர்வுகளால் உறைந்து நின்றேன்!
உயிரே உன்னை கண்ட பின்பு...
...................................................