அன்பு எங்கே - ஒரு விழிப்புணர்வுப் பாடல்
ஆஆஆஆஆ..
அன்பு எங்கேஏஏஏ???...
தேடல் தேடல் தேடல்..
இது ஒரு தொடர்கதையாகிவிட்டது பலருடைய
வாழ்வில் வாழ்வில் வாழ்வில்...
ஓஓஓ...
அன்பு தேடல் தான் முற்று பெறுமோஓஓ???...
பக்தி மார்க்கமதிலே முக்தி தேடிச்செல்லும் பல இதயங்களுக்குத் தெரியவில்லையே,
அன்பு தான் பக்தியென்று...
ஏஏஏஏஏ...
என்னடா மனிதக்கூட்டமிது???...
கல்லில் சிலை செய்தே அதற்கு உயிர் பலிகளிட்டே விருந்து படைக்கிறதே...
சக மனிதரோ வறுமையின் கொடுமையால் ஒரு வேளை கூட உணவின்றி பசியாலே மடிக்கிறானே...
ஐயகோஓஓஓ?
இதென்ன கொடுமை???...
பணத்தைக் கண்டால் மனிதப்பிணம் கூட குணம் மாறுகிறதே...
ஓஓஓ...
வறுமையைத் தாக்கத்தைத் தத்ரூபமாக வரைந்தான் ஓவியனவன்..
வறுமையின் கொடுமையைப் பாடினான் கவிஞனவன்..
யாவும் சிறப்பென்று பாராட்டப்பட்டதே தவிர மனிதர்களின் மனிதநேயக் குணங்கள் விழித்தெழவில்லையேஏஏஏ...
அந்தோ பரிதாபம் இந்த மனிதக்குலம்!..
தன்னைப் பாதுகாக்கும் திறமை தன்னில் இல்லையென்றே பற்பல ஆயுதங்களைக் கண்டுபிடிப்புகளாக நிகழ்த்திக் காட்டுதே..
அவற்றால் மட்டும் பாதுகாக்கப்பட்டு விடுவார்களா???..
இல்லை..
தனது அழிவுக்குத் தானே வழிவகுக்கிறது இந்த மனிதக்குலம்..
ஆஆஆ..
அறிவாளிகளென்பது ஒருவரை ஒருவர் அழிப்பதில் தான் வெளிப்படுமாஆஆஆ???...
அன்பென்பது உன்னுள் இல்லையா?..
என்னுள் இல்லையா??...
நம்முள் இல்லையாஆஆஆ???...
பல ஆண்களின் மீது பார்வைவீசும் பெண்களெல்லாம் நடத்தைக் கெட்டவர்களென்று கூறும் போது, பல பெண்களைப் பார்த்து பல்லைக் காட்டும் தங்களும் நடத்தைக் கெட்டவர்களென்பதை உணரவில்லையே இந்த ஆண்கள்....
அந்தோ.. அந்தோ...
உள்ளம் பதறுகிறதே இன்றைய சமுதாய காதல் நெறி காணுகையிலே....
இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்த்தேன் அந்த ஆணும் பெண்ணும் காதலர்களாய் சில்மிஷம் செய்து விளையாடியதை....
இரண்டு வாரங்களுக்கு பின்பு பார்த்தேன் அதே ஆண் வேறு பெண்ணுடன், அதே பெண் வேறு ஆணுடன் காதலர்களாய் சில்மிஷம் செய்து விளையாடியதை...
இது தான் மனிதக் காதலின் மகத்துவமாஆஆஆ???...
என்ன மனிதர்களோ இவர்கள்???...
துய்மையான அன்பறியாத மனமுடைய கள்வர்கள்....
ஏஏஏஏஏ....
உலகமே! இங்கு காற்றுக்கும் காதுண்டு...
சுவருக்கும் கண்ணுண்டு....
உண்மையை என்றும் உன்னால் மறைக்க முடியாதேஏஏஏ.....
புத்திமதிகள் கூறவில்லை,
உங்களுக்கு புத்தியிருந்தால் சிந்தித்துப் பாருங்களே.....
அன்பைக்கொடுத்து அன்பைப் பெறுவதே மகத்துமாகுமேஏஏஏஏ....
ஈஈஈஈஈ....
இழப்பதற்கும் துறப்பதற்கும் வித்தியாசமில்லையாஆஆஆ???..
மறுமணம், மறுகாதல் என்பனவெல்லாம் வாழ்க்கையை இழந்தவர்கள் பெறுவதே நியாயம்....
காமம் தீர்ந்ததும் பிரியும் காமுகக் காதலர்களுக்கும்,
விவகாரத்து வாங்கும் வேடதாரிகளுக்கும் சற்றும் உரிமையில்லாத விடயங்கள் மறுமணமும், மறுகாதலுமேஏஏஏ....
ஏஏஏஏஏ....
என்று தான் உணர்வீர்களோ???....