அன்புள்ள அப்பாவிற்கு

பத்து மாதம் தாய்வயிற்றில்
பத்திரமாய் நானிருந்தேன்
அந்த சத்திரத்தில் நித்தியமும்
தங்குதற்கு யோகமில்லை
அங்கு சத்தியமாய் துக்கமில்லை
துயரங்கள் ஏதுமில்லை
அங்கிருந்து வாழ்ந்த கதை
அற்புதங்கள் என்றாலும்
நான் அங்கிருந்து இங்குவர
ஆவலுடன் காத்திருந்தேன்
என் தங்க தந்தையின் முகம்
காணத்தானே நான் தவித்திருந்தேன்
தெய்வத்தின் தோள் சாய்ந்து
உறங்கிடவே ஆசைப்பட்டேன் -நீயோ
பல்லக்கில் போகின்றாய்
படுத்தபடி போகின்றாய்
கல்லறையின் நிழல் தேடி
கண்முடி போகின்றாய்
கண்மணியின் கண்சிவக்க
கதறி அழும் என்னை
என்னம்மை என்றணைக்காமல்
எங்கேயோ போகின்றாய்
கலைமகள் நானிருக்க நீ
கண் மூடியது எதற்கு?
அவருந்தன் அன்புள்ளம்
இனி இவளும் அறிவாலோ?
மாய உலகில் மகளை விட்டு
மறைந்த உன்னை என்செய்வேன்
வரமாய் வந்த உன்னை
விரகால் எரித்த கொடுமை என்செல்லேன்
ஆயுள் முழுதும் பெயர் சுமந்து
உன் தாயாய் நானானேன்
தந்தை முகம் காணாம‌ல்
தண்ணீரில் அழும் மீனானேன்
என் கனவு காணலாக
என் கவிதை தீர்ந்து போக
என் கடிதம் முடிக்கிறேன்
என் அன்புள்ள அப்பாவிற்காக!!!!

எழுதியவர் : மதி (28-Feb-17, 8:22 pm)
Tanglish : anbulla appavirku
பார்வை : 106

மேலே