கண்ணீரே விதைப்படு
வீணாய் மண்ணில் வீழ்ந்திட
வெற்று துளியும் அதுவல்ல
வினை புரியும் துயரவனின்
ஒற்றை எதிரெனெ அறிவீரோ
ஊற்றி வைத்த சினம் அதுவும்
சீற்றம் கொண்டு தான்பாய
உனக்காய் ஓர்நொடி கருத்தரிக்கும்
அதுக்கென நீயும் பொறுத்திரு
கண்ணீருக்கும் விலையுண்டு
அதன் வினையை ஒட்டி மதிப்புண்டு..
$வினோ......