காலம் கடந்த ஞானம்
தறிகெட்டு ஓடிய
மனம்
அடக்க ஆளின்றி
ஆடிய
அகங்கார ஆட்டம்
கடிவாளம் அற்ற
குதிரையாய்
வாயில் நுரைதள்ள
ஓடிய
ஓட்டமும் ஒடுங்கி
விட
கடந்து வந்த
பாதையை
திரும்பி பார்க்க
காலடித் தடத்தையும்
காலம் துடைத்து
போனது
தயங்கியே திகைத்து
நிற்க
அடங்கி இருக்கலாம்
என்று தோன
அடக்கம் மட்டுமே
பாக்கியென்று
காலம் உணர்த்தியது!
#sof_sekar