என் முதல் காதல்
காதல் நமக்குள் வந்த அந்த நொடி நாம்
நாமாக இருப்பதில்லையே...
காதல் அர்த்தம் யாரும் அறியவில்லை...
நானும் அறியவில்லை...
அந்த உணர்வில் சிக்கி தவிக்கும் முன் வரை நான் ...
யாரையும் மதித்ததில்லை...
மூர்க்கமாய் கோவம் வரும்...
நான் வைத்தது மட்டுமே சட்டம்...
என்னை யாரும் ஏதும் செய்திட முடியாது...
என் இஷ்ட படி இருப்பேன்...
இத எனக்கு பிடிச்சுருக்கு பண்ணுவேன்...
எனக்கு பிடிச்ச மாறி தா டிரஸ் பண்ணுவேன்..
எனக்கு பிடிச்ச இடத்துக்கு எப்போனாலும் போவான்...
நான் தடை இல்லாத காற்று....
இப்படி பலவாறு நம் இஷ்டத்துக்கு வாழ்ந்த நான்
இன்று...
எனக்குள்ளே ஓர் புது உணர்வு...
நான் பெண்மையின் மென்மையை முழுதாய் உணர்கிறேன்...
எனக்கென ஓர் உலகம் உருவாக்கி அதில் அவனை மட்டும் நினைவில் நிறுத்தி
உயிரில் பொருத்தி
கண்ணில் ஏந்தி
கனவாய் கண்டு
உணர்வாய் உணர்ந்து...
என்னை முழுதாய் புதிதாய் பார்க்கிறேன் ...
அவனோடு சேரும் நொடிக்காக காத்திருந்து
அவன் மீது அளவில்லாத அன்பு வைத்து
உருகும் என் மனம் என்னை வியந்து பார்த்தது....
நீயா இது ?
மொத்தத்தில் நான் நானாக இல்லை...
அவன் மீதுள்ள அன்பில் இல்லை எல்லை...
இதுவே என் காதலின் சுகமான தொல்லை ....
(என்னுளே சிரித்து சிரித்து ஒவொரு நொடியும் கழிகிறது என் காதலில்...)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
