படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிறுமியின் கரங்களில்
தஞ்சம்
குட்டி ஆடுகள் !

மேய்ப்பன் இல்லாத
ஆடுகள்
திசை மாறி விடும் !

பாசம் பொழிந்து
வளர்க்கிறாள்
பின்னர் அழுவாள் !

ஆடுகளின் ஆயுள்
தீபாவளி
வரைதான் !

தீபாவளிக்குத்
தப்பினால்
ரம்ஜானுக்கு இரை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (3-Mar-17, 10:57 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 82

மேலே