கையொப்பம்

இதுவரை நான்,
கண்டு மகிழ்ந்த காதல் படங்கள், அதன் காட்சிகள்,
கேட்டு சிலிர்த்த காதல் பாடல்கள் , அதன் இசைகள்,
படித்து இன்புற்ற காதல் கவிதைகள், அதன் வரிகள் மற்றும் எழுத்துக்கள்.
இவ்வெல்லா இன்பங்களையும் விட ஒரு படி மேல் இருந்தது!
என் இதழில் உன் இதழால் நீ இட்ட கையொப்பம்!
-அகரன்.