முதிரா கன்னி
கவர்ண்மெண்ட்ல ஒரு வேல கூட வாங்கிரலாம் போலருக்கு ஆனா சென்னையில வாடகைக்கு வீடு கிடைக்கிறது குதிரை கொம்பு. ட்ரைனிங் முடிச்சிட்டு சென்னையில வேல கிடைச்ச சமயம் அது. நானும், என்னோட வேலைக்கு சேர்ந்த இன்னொரு ப்ரெண்ட்ஸ்ஸும் சேர்ந்து வீடு தேடி அலைஞ்சோம். வேலையில சேர இன்னும் பதினஞ்சு நாள் பாக்கியிருக்கு. அதுக்குள்ள வீடு தேடியாகனும்.
டூலெட் போர்டு பாக்குற எடமெல்லாம் ஏறி இறங்குறோம்...வீடு கிடைச்ச பாடில்ல. சுத்துறதுக்கு சுகமா இருக்க இது என்ன ஊட்டியா... கொடைக்கானலா... சென்னை. வெயில் எங்கள கடற்கரையில காய வெச்ச கருவாடா வாட்டி எடுக்க... வீடு தராதவன் மேலையெல்லாம் கோபம் கொந்தளிக்கிது.
'பாஸ்,நாம சேகுவேராவுக்கு தோழனாயிடுவோமா...?'
'என்ன சொல்றீங்க...'
'ஆமா பாஸ்...அநீதிக்கு எதிரா குரல் எவனும் என் தோழனேன்னு சொல்லியிருக்கார் பாஸ்... பேச்சிலர்ஸ்க்கு வீடு கொடுக்காதவங்களுக்கு எதிரா குரல் கொடுப்போம்...என்ன சொல்றீங்க...?'
'யோவ் சும்மா இருய்யா... நானே வெறியில இருக்கேன்.நீ வேற வெறி ஏத்தாதய்யா...'
'ஸாரி பாஸ்...ஏதோ ஆதங்கத்துல சொன்னேன்.ஆமா பாஸ்...ஏன் பேச்சிலர்ஸ்ஸுக்கு வீடு கொடுக்க மாட்டேங்கறாங்க...?'
'ஆமா...நீங்க வாடகை குடுக்கறேன்... வாடகை குடுக்கறேன்னு சொல்லிட்டு வீட்டுகாரர் பொண்ணையே இழுத்துட்டு ஓடிறீங்க...பின்னே எவன் கொடுப்பான் வீடு...?'
'விடுங்க பாஸ்...வீட்டுகாரர் பொண்ணென்ன பொண்ணு... நாம வீட்டுகாரம்மாவையே கரெக்ட் பண்ணிடுவோம்...'
மேலேயும்...கீழேயும் பார்த்தேன். கோபமாத்தான்...
'என்ன பாஸ் பாக்குறீங்க...தப்பா நெனச்சுக்காதீங்க,காய்கறி வாங்கி கொடுக்கறது,கரெண்ட் பில் கட்டுறது,தண்ணி அடிச்சு கொடுக்கறதுன்னு...அப்படி கரெக்ட் பண்றத சொன்னேன் பாஸ்...
'முதல்ல வீடு கிடைக்கட்டும்...அத அப்புறம் பார்க்கலாம்...'
'கிடைச்சிடும் பாஸ்...நம்புங்க... நம்பிக்கைதானே எல்லாம்...'
உஷ்ணமாய் ஒரு பார்வை பார்த்தேன்.
'ஓகே பாஸ்...இனி வாய திறக்கவே மாட்டேன்...'
அமைதியாய் கொஞ்ச தூரம் நடந்த பிறகு...ஒரு வீட்டில் 'இங்கு வீடு வாடகைக்கு விடப்படும்' போர்டு தொங்கியது.
கேட்டில் கை வைத்தேன்.
'கொஞ்சம் இருங்க பாஸ்... பாத்துக்கறேன்...'
'என்னத்தய்யா பார்க்கற...'
'நாய்கள் ஜாக்கிரதை போர்டத்தான்... ஏற்கனவே ஏறி குதிச்சதுல இருந்த ஒரு நல்ல பேண்டும் கிழிஞ்சி போச்சு...அதான் ஒரு எச்சரிக்கை...'
'முன் அனுபவம் பேசுது...அதெல்லாம் ஒண்ணுமில்ல...வாய்யா போகலாம்...'
பாஸ்...வீடு பெரிய வீடா இருக்கு பாஸ்...வாடகை கூட கேட்டாலும் கேப்பாங்க...வாங்க இப்படியே ஓடிறலாம்...'
'மொட்ட மாடியில இருக்கற ஆஸ்பெடாஸ் கொட்டகைதான் வாடகைக்கி,இந்த வீடெல்லாம் நமக்கு கொடுக்க மாட்டாங்க...'
காலிங்பெல்லில் கை வைத்தேன். சிறிது நேரத்தில் உள்ளே காலடியோசை கேட்டது.மெலிதான கொலுசு சத்தமும் கூட...கதவு திறந்தது....
தொடரும்....