செய்திக்கு செய்த கதை

செய்தி : 5000 ரூபாய் குறைந்தபட்ச வைப்புத் தொகை.. இல்லாவிட்டால் அபராதம்.. அச்சுறுத்தும் எஸ்.பி.ஐ வங்கி.

காலை நேரம். சென்னை மாநகர் புறநகர் பகுதியொன்றில் பைக்கில் வந்திறங்கிய மூவர் அங்கிருந்த ஒரு டீக்கடையில் ஒரு புகைப்படத்தைக் காட்டி ஏதோ விசாரிக்க, டீக்கடைக்காரர், கடையின் எதிர்புறத்தில் கைகாட்டி ஏதோ விளக்கவும், "நன்றி" என்று கூறி வந்த பைக்கில் ஏறி வாகனத்தை ஒரு சிறிய இல்லத்தின் முன் நிறுத்தவும், முவரும் கீழே இறங்கினார்கள். அதில் ஒருவன் டீக்கடைக்காரர் குறிப்பிட்ட இல்லத்தின் முன் சென்று, செல்லப்பா .. செல்லப்பான்னு கூப்பிடவும், குடிசையிலிருந்து வெளியே வந்த பெண்மணி, "யாருங்க .. நீங்க" என்று வினவ, "செல்லப்பா வீட்டுல இருக்கிறாரா, அவரைப் பார்க்கவேண்டுமென்றான் அவன். "உள்ளே தான் இருக்காரு. இதோ கூப்பிடறேன்"னு சொல்லி, உள்ளே சென்று அவள் கணவனை அழைத்து வருகிறாள்.

அந்நேரம், மற்ற இருவரும் அங்கு வரவும், "நீங்க தான் செல்லப்பாவா"னு ஒருவன் கேட்க, "ஆமாம் .. என் பேருதான் செல்லப்பா" ன்னு சொல்லவும், ஒருவன் தன் கையில் இருக்கும் ஆவணமொன்றிலிருக்கும் புகைப்படத்துடன் ஒப்பிட்டிப் பார்த்துக்கொள்கிறேன்.

"மணியண்ணே, நாம தேடிவந்த பேர்வழி இவந்தாங்க" என்று சொல்லவும், செல்லப்பாவின் மனைவியின் கண்களில் ஒருவித பயம் தோன்ற, "யாருங்க நீங்க. என்ன வேணும் உங்களுக்கு"னு கேட்கவும், "ஆறு மாசமா வங்கிக்கு அபராத தொகை ரூ. 900 கட்டவே இல்லை . வங்கியிலிருந்து எங்களை அபராத தொகையை வசூலித்துத் தரும்படி அனுப்பியிருக்கா"னு சொல்லவும், "அபராதமா .. வங்கியில் கடன் ஒன்றுமெடுக்கவில்லையே. பின் எதற்கு அபராதம்" என்று கேட்கவும்,

"பாருடா .. ஒன்னும் தெரியாதவங்க மாதிரி நடிக்கிறா .. ஏம்மா உன் புருஷனோ நீயோ டீ.வீ. பாக்கமாட்டீங்களா" னு கேட்கவும் "கலைஞர் கொடுத்த டீ.வீ. எங்களுக்கு கிடைக்கைவே இல்லீங்க" .. காசு கொடுத்து டீ.வீ. வாங்கிற அளவுக்கு எங்களுக்கு வருமானம் இல்லீங்க"னு சொல்லவும், மூவரும் சிரித்துக்கொண்டே,

"ஸ்டேட் பேங்க்ல உங்க புருஷன் பேருல வெச்சிருக்கிற கணக்குல குறைந்த பட்ஷமாக ரூ.5000 வெச்சிருக்கணும். கடந்த ஆறு மாசமா அவரு கணக்குல ஒரு ரூபா கூட இருப்பு இல்லை. அதனால மாசம் ரூ. 150 அபராதம் வீதம் ஆறு மாசத்துக்கு ரூ.900 இப்பவே கட்டணும். பணத்தை கொடுத்துட்டா, நாங்க போயிடுவோம். இல்லேன்னா அடுத்து போலீசு தான் வருவாங்க" னு சொல்லவும், செல்லப்பாவும் அவரது மனைவியும் தலைசுற்றி தரையில் வீழ்ந்தனர்

எழுதியவர் : (5-Mar-17, 8:29 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 268

மேலே