எங்கே நிம்மதி
ஒருவர் மன நிம்மதி வேணும்ன்னு ஒரு சாமியாரை பார்க்க போனாரு.
சாமியாரை வணங்கி, "வாழ்க்கை அமைதியா , சந்தோஷமா போகணும் , அதுக்கு நான் என்ன செய்யணும்னு கேட்டாரு.
சாமியார், " உங்க, மனைவி சமையலை என்றாவது புகழ்ந்து பாராட்டியிருக்கிறீங்களா" னு கேக்கவும்,
"கல்யாணமாயி, இந்த இருவது வருஷத்தில ஒரு வேளை கூட என் மனைவி சமையலை புகழ்ந்து பாராட்டுனதில்ல" னு ரொம்ப மெதப்பா பதில் சொன்னாரு.
சாமியார், "அடுத்த தடவ சாப்பிடும் போது மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்கன்னு" அட்வைஸ் செஞ்சப்போ ..
என் மனைவி இதுவரை சமைத்ததேயில்லையே .. எப்படி நான் அவளை பாராட்டுவேன்னு கேட்டாரு.
அப்போ ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறீர்களான்னு கேட்டாரு.
இல்லீங்க .. கல்யாணமான நாளிலிருந்து நான் தான் சாமி சமைக்கிறேன்னு சொன்னாரு.
சாமியார் அவரிடம் "உங்க மனைவி உங்க சமையலை எப்பவாவது புகழ்ந்திருக்காங்களான்னு கேட்டாரு.
மூனு வேளையும் புகழ்வதுண்டு ன்னாரு.
நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.புருஷனைப் புகழற பொண்டாட்டி கிடைக்கிறதே அபூர்வம் இதைவிட பெரிய சந்தோசம் உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காதுன்னு சொல்லி, வாழ்க வளமுடன்னு வாழ்த்தி அனுப்பி வைத்தாரு சாமியாரு