முதிரா கன்னி2
ஒரு அழகான பெண்மணி.வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்துக்குள் இருக்கலாம்.
'என்னங்க...யாரோ வந்திருக்காங்க... வந்து என்னன்னு கேளுங்க...' சொல்லிக்கொண்டே திரும்பி விட்டாள்.
'பாஸ்...வெரி ப்யூட்டிபுல் ஆன்ட்டி ... வாடகைக்கு எடுத்தா இந்த வீட்டத்தான் எடுக்கணும்... 34 - 30 - 34
'முறைக்காதீங்க பாஸ்...ரூமோட அளவ சொன்னேன்...'
'எல்லாம் எனக்கும் தெரியும்... அதிகபிரசங்கிதனமா வாயவிட்டு காரியத்த கெடுத்துடாதேய்யா...'
அதற்குள்ளாக வீட்டுகாரர் நெருங்கியிருந்தார்.
'என்னங்க...என்ன வேணும்...'
'வெளிய டூலெட் போர்டு பார்த்தோம்...'
'ஆமா...'
'அதான் வீடு வாடகைக்கு வேணும்...'
'நீங்க எல்லாம் பேச்சிலர்ஸ்ஸா...'
'ஆமாண்ணே...இப்ப பேச்சிலர்தான் இன்னும் கொஞ்சநாள்ல பேமிலி ஆகிடுவோம்...அப்புறம் ஒரு வீடில்ல ரெண்டு வீடு தேவைப்படும்...'
திரும்பி பார்த்தேன்.
'அதெல்லாம் எப்படியோ... பேச்சிலருக்கு வீடு கிடையாதுங்க..'
'அண்ணே...அண்ணே... அப்பிடியெல்லாம் சொல்லிராதீங்கண்ணே...ஊர்ல இதவிட பெரிய வீடா அரண்மணை மாதிரி ஆயிரம் பேர் தங்கற அளவுக்கு அப்பா கட்டி போட்டுருக்காரண்ணே...ஏதோ எங்க போதாத நேரம் இந்த சென்னையில மாட்டிகிட்டோம்...'
'அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க... வீடு கெடையாதுன்னா கெடையாதுதான்...நீங்க கௌம்புங்க...'
உள்ளே அவரின் மனைவி குரல் கொடுக்க ஓடாத குறையாக நடந்தார். அந்தம்மா ஏதோ சொல்ல சொல்ல இவர் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவதுதான் தெரிந்தது.
உடனே திரும்பி வந்தார்.
'சரிங்க பார்க்க பாவமா இருக்கீங்க... என்னோட வீட்டுகாரி வேற ரெக்கமண்ட் பண்றா...தங்கிட்டு போங்க...ஆனா ஒண்ணு தண்ணியடிக்க கூடாது...சிகரெட் பிடிக்க கூடாது...மாடியில நின்னுகிட்டு போற வாற பொண்ணுகள சைட் அடிக்க கூடாது...சரியா...?'
'பாஸ்...இந்தாளு என்ன வீடுதானே தரான்...என்னமோ மிலிட்டரியில வேல தராமாதிரி பேசுறான்...'
'யோவ்...சும்மா இருய்யா,காரியம் கூடி வர்ற நேரம் ஏதாவது பேசி கவுத்துடாதய்யா...'
'ஸார்...அப்புறம் வாடகையெல்லாம் சொல்லிட்டிங்கண்ணா வசதியாயிருக்கும்...'
'வாங்க...வீட்ட சுத்தி பார்த்துட்டே பேசலாம்...'
'பெரிய மைசூர் மகாராஜா பேலஸ்... சுத்தி பார்த்துட்டே பேச...நாய்க்கி சவடால பாரு...'
'என்னங்க...என்னமோ சொன்னீங்களே...'
'இல்ல...இல்ல...வீடு பேலஸ் மாதிரி இருக்குன்னு சொன்னேன்...'
'வாடகை ஆயிரத்து ஐநூறு ரூபா... அட்வான்ஸ் பத்தாயிரம் ரூபா...சரியா...'
'ஸார்...என்ன ஸார் சொல்றீங்க...இது கொஞ்சம் அதிகம் ஸார்...'
'என்ன அதிகமா...அப்போ நீங்க வேற வீடு பார்த்துகங்க...பேச்சிலருக்கு வீடு கெடைக்கிறதே பெருசு,ஏதோ படிச்ச புள்ளங்களா இருக்கீங்களே கொஞ்சம் டீஸண்டா இருந்துக்குவீங்களேன்னு கொடுத்தா...இப்படி சொல்றீங்க...'
'சரி ஸார்...ஒத்துக்கறோம்...'
'அப்புறம் கரண்ட் பில் தனியா கொடுத்துடனும்...'
கைப்பிடி சுவர சேர்த்தா மாதிரி நாலு பக்கமும் சுவர எழுப்பி மேலே ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்டிருந்தது.முன்னாடி ஒரு சின்ன வராண்டா.இடையில் ஒரு சுவர் எழுப்பி இரண்டு ரூமாக பிரித்திருந்தார்கள்.
'இந்த பக்கத்து ரூமையும் பயன்படுத்திக்கலாமா ஸார்...'
'அதுக்கு தனியா ஆயிரத்தயினூறு கொடுக்கனும் ஓகேவா...'
'இந்த ரூமே பெரிசாத்தான் இருக்கு...'
சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு கிடைப்பது மிகவும் சிரமம்.அப்படி உடனே கிடைத்துவிட்டால் அவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள்.சென்னையில் வாடகை வீடுகளில் வாழ்வதென்பது நரகத்தில் வாழ்வதற்கான முன்பயிற்சி கூடங்கள் போன்றது.
சமைப்பதற்கு கொஞ்சம் இடமும், கட்டிலோ,பீரோவோ போடுவதற்கு கொஞ்சம் இடமும் இருந்தால் போதும்...ஒரு ரூம் ரெடி.ஐநூறோ, ஆயிரமோ வீட்டுக்காரர் சொன்னதுதான் வாடகை.பல ஊர்ஆட்களின் படையெடுப்பில் சென்னை சிக்கி கொண்டிருக்க... வீடு கிடைக்காமலும்...வேலை கிடைக்காமலும்...பல பேர் திணறி கொண்டிருக்க...எப்படியோ காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இரண்டு மாதங்கள் ஓடியிருந்தது....
தொடரும்...