பெண் பார்க்க சென்றேன்
என் பெயர் தமிழ்ச்செல்வன். எனக்கு 29 வயது ஆகிறது. என் பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். ஒரு பெண்னையும் பார்த்து வைத்திருக்கிறார்கள். அவள் பெயர் கவிதா. அவளை நேரில் பார்ப்பதற்காக இன்று நானும் என் பெற்றோரும் கோவிலுக்கு வந்திருக்கிறோம். அவர்கள் இன்னும் கோவிலுக்கு வரவில்லை.
எனக்கு இது முதல் முறை என்பதால் பதட்டமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. அவளை போட்டோவில் தான் பார்த்திருக்கிறேன். அவளும் என்னை போட்டோவில் பார்திருப்பால்.
அவள் நேரில் பார்ப்பதற்கு எப்படி இருப்பாள்? அவளுக்கு என்னை பிடிக்குமா? அவள் அன்பானவளாக
இருப்பாளா? என்று என்னுள் இப்பொழுதே பல கேள்விகள் எழ துவங்கிவிட்டன.
அவர்கள் கோவிலுக்கு வந்துவிட்டார்கள் என்று கைப்பேசி மூலம் செய்தி வந்தது. நாங்கள் கோவிலில் தெய்வத்தை வணங்க சென்றோம் அவர்களும் அந்த இடத்திற்கு வருவதாக கூறினார்கள்.
நாங்கள் அங்கு சென்றதும், அவர்களும் அங்கு வந்தார்கள். நான் அவளை பார்த்தேன். அவள் மிகவும் அழகாக இருந்தாள். அவளின் கூர்மையான கண்கள் என்னை இரண்டாக துண்டு துண்டாக வெட்டியது.
தலையில் பூ, கண்களுக்கு மை, அழகான சிரிப்பு, வெட்கம் கலந்த பார்வை. அது மட்டுமில்லாமல் புடவையில் அவள் அழகான தேவதையாகவே எனக்கு தெரிந்தால்.
கோவிலில் ஒரு இடத்திற்கு சென்று அமர்ந்தோம். என் அம்மா அவளிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். அவளின் அப்பா என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவளை பார்த்தேன்.
என் அம்மா அவள் அம்மாவிடம் ஏதோ சைகை காட்டினார்கள். அதன் பிறகு அம்மா என்னிடம் "போய் சாமி கும்பிட்டு வா" என்று கூறினார்கள். என்னை அனுப்பி விட்டு அவர்கள் ஏதோ தனியா பேச போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவளின் அம்மாவும் அதே கூறினார்கள், அப்போழுது தான் எனக்கு புரிந்தது.
என் அம்மாவிடம் "இதலாம் வேணாம் மா உனக்கு ஓகே நா எனக்கும் ஓகே மா" என்று கூறினேன். ஆனால் அவர்கள் எங்களை தனியாக போக வற்புறுத்தினார்கள்.
நானும் அவளும் தனியாக சென்றோம். எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேச வார்த்தையே வரவில்லை. அவளும் எதுவும் என்னிடம் பேசவில்லை. நான் தைரியத்தை வரவைத்து என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று கேட்டேன்.
அதற்கு அவள் சிரித்துக்கொண்டே பிடித்திருக்கிறது என்று தலை ஆட்டினாள். அவளின் சிரிப்பு எனக்கு அவளிடம் பேச துணிவை வரவைத்து. அவளும் என்னிடம் பிடித்திருக்கிறதா என்று கேட்டாள். எனக்கும் உங்களை பிடித்திருக்கிறது என்று கூறினேன்.
பிறகு எங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அவளின் கைப்பேசி எண்னை வாங்கி அவளிடம் பேச ஆரம்பித்தேன். அவளுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு அவள் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ள வில்லை. திருமணம் முடிந்த பிறகு தான் என்று கூறிவிட்டார்கள். ஆதலால் அவர்களுக்கு தெரியாமல் சினிமா, பீச், பார்க் என்று வெளியே சென்றோம்.
ஒரு வழியாக எங்களுக்கு திருமணம் நடக்கும் நாள் வந்தது. நாங்கள் மணமேடையில் அமர்த்துக்கொண்டு இருந்தோம். ஐயர் என்னிடம் "தம்பி நல்ல நேரம் முடிய போகுது தாலி கட்டுப்பா" என்று கூறினார்.
மங்கள இசையான கெட்டிமேளம் இசைக்க, அவளின் அழகான வெட்கம் கலந்த கண்களை பார்த்து, அவளின் சிரிப்பை ரசித்து அவள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி எங்கள் வாழ்க்கையை தொடங்கினோம்.