தெரு அளந்தாள்
மாலை வர
முகம் கழுவிப் பூச்சிட்டாள்
திருத்திய தலையில்
முல்லைச் சரம் அணிந்தாள்
கண்மை தீட்டி
வட்ட வடிவு பொட்டிட்டாள்
திருத்தமான உடையணிந்து
வீட்டைப் பூட்டி வெளிவந்தாள்
கைப்பேசி எடுத்து
வெளியூரில் கணவனை அழைத்தாள்
இனிமையாய் முகம்மலர
பேசிடத் துவங்கினாள்
நடை பயின்றாள்
தெரு அளந்தாள்
----முரளி