ஒருதலை காதல்
முத்தங்கள் பலதர நினைக்கிறேன்
மொத்தமாக உன்கன்னத்தில் மட்டும்
சப்தங்கள் பல கேட்டாலும்
கேட்பது உன்குரல் மட்டும்
வாழ்வின் விளிம்பில் நானின்றாலும்
வாழவைப்பது உன் நினைவுகள்
வாழ்ந்த வாழ்வின் அர்த்தமடங்கும்
உன்னுடன் வாழ்ந்தநொடியில் மட்டும்
-தரணி ஜெயராமன்