சாப்பிட ஒன்னும் இல்ல

வீட்டில் (மதியம்)

மகன்: அம்மா!! சாப்பிட என்ன செஞ்சியிருக்க?

அம்மா: ஒன்னும் செய்யல டா...

மகன்: ஒன்னும் செய்யலையா. ஏன் மா?

அம்மா: மீன் குழம்பு செய்யலாம்னு, மீன் வாங்க கடைக்கு போனேன் டா. மீன் காலியாய்டுச்சினு சொல்லிட்டாங்க டா அதான் எதுவும் செய்யல...

மகன்: ????

மகன்: மீன் இல்லனா என்ன வேற எதுனா வாங்கி செய்ய வேண்டியது தானே...

அம்மா: நானும் அப்படி தான் நெனச்சேன் டா.. ஆனா அந்த கடையில மீன் தவிற வேற எதுவும் விக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க..

மகன்: ????

மகன்: வேற கடைக்கு போய் வாங்க வேண்டியது தான

அம்மா: நானும் வேற கடைக்கு போய் மீன் வாங்கிட்டு வந்தேன் டா. ஆனா அந்த கடைக்காரன் ஒரு கவர் ல தண்ணி ஊத்தி அதுல மீன உயிரோட போட்டு கொடுத்துட்டுட்டான் டா... அத எப்படி சமைக்கறது னு எனக்கு தெரில டா.

மகன்: ???????????????????????

எழுதியவர் : சரவணன் (5-Mar-17, 9:19 pm)
சேர்த்தது : சரவணன்
Tanglish : sappita onnum illa
பார்வை : 931

சிறந்த நகைச்சுவைகள்

மேலே