எண்ணம்

எழுத்து!
நிகழாமையையும் ஒவ்வாமையையும்
பகிற வல்லது.
உற்றபொழுதில்
பெரிதுவக்கின் சரித்திரத்தில்
கற்க வல்லது.
ஆநிரை தருவதும்
பூ நிறைந்து கொடுப்பதும்
உணர வல்லது.
எழுத்து!
கிறுக்கலில் தொடங்கி
வடிவத்தில்
மாக்களை
மக்களென
பரிணாமிக்க வல்லது.
எழுத்து!
அரசியலில்
இயலாமையை
இல்லாமையென
காட்ட வல்லது.
யாவும்....
யாம் நிரப்புதலும்
நோக்குதலும்
இலக்கண
பிழையன்றோ?

எழுதியவர் : சுரேஷ்குமார் (6-Mar-17, 12:12 am)
Tanglish : ennm
பார்வை : 142

மேலே