சோறு போடும்
சோறு போடும்
நிலத்தை கூறுபோட்டு
விற்றுவிடும்
அவலத்தை அகிலத்தில்
எங்கே நாம்
போய்ச்சொல்ல.....???
ஆகாயக் காற்றும்
அசுத்தமாய்
போச்சுது.....அது போதாதென்று
ஆழ்குழாய்
விட்டு.....அடிநிலமும்
அழிந்தே போகும்
என்று அங்கே இங்கே
சில வரலாறுகள்
உண்டு.....விழித்தே
இரு.....நாளைய
தூக்கம் நல்லபடியாய்
அமைந்திட.....!!!
பொருளாதார
கள்ளநரிகள்....
காத்திருக்கிறது
நிலக்கரி நிலக்கரி
என்று
சொல்லி....நம்
நிலத்தை
கரியாக்க.....நம்
வாழ்வை
அல்ல....நாளை நம்
பிள்ளை.....வாழ்வு
நலமாகிட
விழித்தே இருப்போம்.....
வாழ்க்கையே
ஒரு
போராட்டம்.....
நமக்கு
இங்கே
மாட்டுக்கும்
மனுசனுக்கும்
என்று
போராடுவதே
வாழ்க்கை
என்றாச்சுது.....!!
நெடுவாசல்
நீடூழி
வாழ....மூடிவிட்டு
அவன் போகும்வரை
உன்
வீடுவாசல்
மறந்தே
விழிமூடாதிரு.....!!
காளைக்கே
கிடைத்தது
வெற்றி....
கவலை விடு
விடிகாலை
வெற்றியே
உனக்கு......!!
நாளைய
சந்ததியின்
கேள்விக்கணைகளால்
கூனிக்குறுக்காமல்
இன்றே
ஒன்றித்து நின்று
வரலாற்றில்
இணைந்துவிடு......நாளைய
எதிர்காலம்
உன்னைத்
தொட்டுச் செல்லும்......!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
