வெறுமை
தனிமையோடு விளையாடிய நான்
தவிக்கின்றேன் என்று
விளையாட்டில் செய்த பிழைகள் அல்ல
பிழைகளோடு விளையாடி
விட்டேனோ என்று ??
இந்த நிமிடம் என்னிடம்
எதுவுமில்லை
வெண்ணிற காகிதமும்
அதை வார்த்தைகளால் வர்ணிக்க துடிக்கும்
பேனாவையும் தவிர
ஏன் இந்த வெறுமை
எதன் உச்சம்
இப்படி ஒரு தனிமை
நான் கண்ட மேகம்
கண் கலங்கி நிற்பதன்
காரணம் என்ன ?
வேஷம் அணிந்ததில்லை
வேறுபடுத்தி பேசியதில்லை
மன்னிக்க மறந்ததில்லை
மதிப்பளிக்க தவறியதில்லை
எதன் பிம்பம் இந்த வெறுமை எனக்கு
என்று முடியும் இந்த தனிமை கணக்கு ???