ஹலோ காதல் நீங்க நல்லவரா கெட்டவரா

கல்லை சிற்பமாக்கும்
சிற்பத்தை சிதைவாக்கும்
காயை கனியாக்கும்
சிந்தையை சிறப்பாக்கும்..
மனதை மகிழ்வாக்கும்
மடையனை மாமேதையாக்கும்
கோழையை வீரனாக்கும்
வீரனை கோழையாக்கும்
அழகை ரசிக்க வைக்கும்
அழகை வெறுக்க வைக்கும்
பெண்ணை பெருமையாக்கும்
பெண்ணை சிறுமையாக்கும்
உறக்கம் இனிக்கும்
உள்ளம் இனிக்கும்
உறக்கம் கெடுக்கும்
உள்ளம் கசக்கும்
உன்னையும் பிடிக்கும்
என்னையும் பிடிக்கும்
ஊரெல்லாம் பிடிக்கும்
மழையும் பிடிக்கும்
மார்கழியும் பிடிக்கும்

இன்னும் பிடிக்கும் "பைத்தியம்" கூட பிடிக்கும்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (6-Mar-17, 7:55 pm)
பார்வை : 106

மேலே