சகோதரன் பாலசுப்ரமணிய ஆதித்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புச் சகோதரன் பாலசுப்ரமணிய ஆதித்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
ஒல்லாமை தகர்த்து வல்லமை வகுப்பவன்
கல்லாமை ஒழித்து பல்கலை நிருவிப்பவன்
இல்லாமை சபித்து ஈகையில் சுபித்தவன்
அல்லாமை அகற்ற ஒல்லையாய் ஒழுகியவன்
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரத்தன்
சிவந்தி ஆதித்தன் சீராட்டுப் புத்திரன்
வகுத்தப் பாதையில் வல்லூறாய் முனையும்
சின்னய்யன் பாசறை செல்வப் பாத்திபன்
ஆபுத்திரன் கண்டெடுத்த அமுதசுரபி இவன்
ஆயுள்கனி தந்த ஔவைத்தமிழ் போற்றுபவன்
ஓய்வின்றி வலம்வரும் உலகத்தில் உறுவதுவை
தோய்வின்றி உறைப்பிக்கும் ஊடகத்து உரிமையன்
மாசியில் பிறந்த மாசற்ற பாலசுப்ரமணியன் உனை
உறவாரும் அறுப்பாரும் மறவாரும் மறுப்பாரும்
இணையாகி துணையாகி உள்ளார்ந்து உனைவாழ்த்தி
பல்லாண்டு பாடிட திருவண்ணாமலையானின் திருவருள் வேண்டுகிறேன்!
கவிதாயினி அமுதா பொற்கொடி