எண்ணத்தில் பதித்த கவிதைகள் பாகம் 2

உன் மூச்சு காற்று பட்டதையெல்லாம் முன்னூறு முறை தொட்டுப்பார்ப்பேன்..!
உன் விரல் பட்டதைஎல்லாம் வினாடிக்கு ஒரு முறை தொட்டுப்பார்ப்பேன்
நீ முத்தமிட்டு தந்த (சாக்லேட்)...
நான் என்ன செய்வேன் என்பதை
உன்னால் யூகிக்கவே முடியாது


ஆச்சரியமாய் முகத்தை வைத்துகொண்டு ..
ஏய் ! நீ கவிதை லாம் எழுதுவியாடா ?
என்று கேட்ட அந்த வினாடிகளில்
ஐந்தாறு "கவிதை" எழுதி முடித்து இருந்தேன்..


உன் முகப்பருக்கள் அனைத்திற்க்கும்
'முத்து' என பெயரிட்டு கொள்ளவா...
உன்னோடு ஒட்டிக்கொண்டும்
உறவாடி கொண்டும் இருக்கட்டுமே...
நான் சொன்ன 'முத்து' நவரத்தினங்களின் முத்து


அடிக்கடி கண்ணாடி பார்த்து அது உனக்கு என்ன தந்து விட போகிறது....
உன்னை ரசிக்கும் அவ்வளவுதான்....
அடிக்கடி என்னை பார்
நான் ரசித்தும்...
அதோடு "கவிதையும்"
பரிசாய் தருவேன்....


நீ பார்க்கும் பார்வை
நீ பேசும் பேச்சு
நீ உடுத்தும் உடை
நீ நடக்கும் அசைவு
நீ சிரிக்கும் சிரிப்பு..
நீ நீ நீ...என ஒவ்வன்றிலும் ஓராயிரம் கவிதை எழுத முடியும் என்னால்




மலர் நீ மல்லிகை பூ சூடி...
மெல்ல திரும்பி ...ஒரு பார்வை பார்த்து
விழி வழி கேள்வி கேட்டால்...
பதில் என்ன தர முடியும்...
இன்னொரு முறை என்னை பார் என்று தானே பதில் அளிக்க முடியும்

என் கருப்பு கன்னங்களில்....
உன் சிவந்த...
இதழ்களை..ஓட்டிவைத்து ..பாரேன்..
அவ்வண்ணம் ..என் கன்னம் ...மாறிட ..வாய்ப்பு ஏதும்
அமைகிறதா..என பார்க்கலாம்

வெட்கம் கொண்டு கால் விரலிட்டு ...பூமியில்
நீ வரைந்த கோடெல்லாம்...
வானில் பிரதிபலித்து
வானவில்லாய்
மாறிப்போனதடி....

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (7-Mar-17, 1:34 pm)
பார்வை : 123

மேலே