காளையும் காளையும் - ஜல்லிக்கட்டு
காளையும்! காளையும்! - ஜல்லிக்கட்டு !
காளையும் காளையும்
தழுவுவது கண்டு
பொறுக்க முடியாமல்
பிரிக்கும் சதிதான்
மிருகவதையோ!!
ஆடு மாடை மிருகமாய்
அழைக்கும் வழக்கம்
தமிழக வறலாற்றில் -ஏன்
சங்க கால இலக்கியத்தில் கூட
இல்லையடா?
கருணைகொலை செய்பவனெல்லாம்
காப்பாற்ற போகின்றானாம்!!
விவசாயி வீடு போயி பாரு
காளைய வளக்க படும்பாடு!!
ஆனாலும்
மிருகமில்ல எம் புள்ளனு
கர்வத்தோட முத்தமிடும்
பாசத்துக்கு ஏது ஈடு!!
கட்டித் தழுவி -ஆடிக்
களிப்பதைக் காட்டிலும்
வேறெதைக் கொண்டு
விவரிப்பேன் வதையல்ல
விவசாய தோழனின்
வீர விழா இதுவென்று!!!
ஆதரிப்போம் ஜல்லிக்கட்டை!!!!