அவ்வு நீ
ஏண்டிம்மா, பக்கத்தூட்டுக்கு
பட்டணத்தில இருந்து வந்திருக்கற
ஒறவுக்கா பொண்ணு, உம் பேரு
என்னடி?
😊😊😊😊
எம் பேரு அவ்னி பாட்டிம்மா.
😊😊😊😊😊
என்னது அவ்வு நீயா? இந்தா, இந்தக்
கொய்யாய்ப் பழத்தை தூக்கிப்
போடறென். அதக் கவ்வு நீ.
என்னடி பேரு வச்சிருக்காங்க உங்க
அப்பனும் ஆத்தாளும். நம்ம தமிழ்ல
எதோ பேருக்குப் பஞ்ச வந்த மாதிரி.
😊😊😊😊😊
பாட்டிம்மா நீங்க இந்தக் காலத்து
நாகரிகத்தப் பத்தி தெரியாம
இருக்கறீங்க. அதான் அரசாங்கத்தில
உங்க மாதிரி உள்ள 'பெருசு'ங்க
எல்லாம் திருந்துணும் மக்கள் வரிப்
பணத்தில இலவச டீ.வி
குடுத்திருக்கறாங்களே அதில ஒளி
பரப்பற சினிமா, தொடர்களை
எல்லாம் பாக்கமாட்டீங்களா.
😊😊😊😊😊😊
அடி போடி அவ்வு நீ. அந்தச் சனியன்
பிடிச்ச எழவையெயெல்லாம் நான்
பாக்கறதில்லடி. அதையெல்லாம்
பாத்துட்டுத்தான் பல்லுப் போன
கெழவன்கூட பள்ளிக்கொடம் போற
வயச எட்டாத பொட்டப்
புள்ளைங்களக்கூடக்
கெடுகக்கறானுக.
😊😊😊😊
பாட்டிம்மா நீங்க திருவள்ளுவர்
காலத்தில வாழ்ந்துட்டு இருக்கறீங்க.
ரண்டு சினிமாக்கரங்கள நம்ம
மாநிலத்தோட முதல்வராக்கி அழகு
பாத்த இனம் நம்ம தமிழ் இனம்
பாட்டிம்மா. இப்பெல்லாம் சினிமா
டீ.வி மூலமா கேள்விப்படற
பேருங்களைப் பிள்ளைங்களுக்கு
வைக்கிறதுதான் தமிழர்களின்
நாகரிகம்.
😊😊😊😊😊😊
நாசமாப் போச்சு உங்க நாகரிகம்.
பட்டிக்காட்டிலயும் எல்லாஞ் சினிமா
ரசிகர்கள்தாண்டி.
😊😊😊😊
பாட்டிம்மா தமிழை
வளர்க்கவேண்டிய பொறுப்பில
இருக்கறவங்களே அவுங்க
பிள்ளைங்களுக்கு தமிழ்ப்
பேருங்கள வைக்கிறதில்ல.
😊😊😊😊
சரீடி அவ்வு நீ. உங்கிட்ட எதும்
பேசறதுக்கில்லடி. சரி. இந்தக்
கொய்யப் பழத்தைத் தின்னு. அவ்வு
நீ, இதக் கடிச்சு தின்னு நீ.
😊😊😊😊😊😊😊😊
திரைத் தமிழைத் தவிர்ப்போம்.
சீரிளமை குன்றாத
செம்மொழியாம்
நந்தமிழை வளர்ப்போம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Avni = Earth
indiachildnamescom.