அனுதினம் கொண்டாட வேண்டும் மகளிர் தினம்

தினம் தினம் கொண்டாட வேண்டும் மகளிர் தினம்...
அவளின்றி அணுவும் அசையாத போது...
இந்த உலகம் மட்டும் எப்படி சுழலும்...
ஒரு துளி உதிரத்தில்...
ஒப்பற்ற வடிவத்தை...
மழலைச் செல்வத்தை...
அழகாய் படைத்து...
அன்பாய் வளர்த்து..
பண்பாட்டை பாதுகாத்து...
மகிழ்வித்து மகிழ்ந்து...
ஈதல் புரிந்து
செல்பவள்தான் பெண்...!
அவளுக்கு ஈடிணை..
ஏதேனும் உண்டா சொல்?