நான் ஒரு பெண் என்று கர்வமாக சொல்லிக்கொள்கிறேன்

பாதுகாப்பில்லை பெண்களுக்கு கருவறையில்இருந்து கல்லறை வரை
உண்மை தானே
செய்தித்தாளில் தினந்தோறும்
பாலியல் பலாத்காரம்
நடப்பது யாருக்கு?
நமக்கு தானே
எப்படி அடி தாங்குவது
இந்த செய்தியை கற்பனை செய்தும் காணமுடிய வில்லை
தட்டி கேட்க்க தாரணிஇன்றி

இப்படி எத்தனை காலம் முடங்கி
கிடப்பதடி மூலை
செய்திதன்னை பொய்ஆகி சீற்றத்துடன் போராடி
தடுத்தால்
வாழ்க்கை வாழ்வதற்கே...
தடைகற்கள் எல்லாம் நொடிப் பொழுதில் உடையும்


பள்ளியில் பயிலும் மாணவனோ
பக்கத்துக்கு வீட்டு மாமனோ ,
உடன் பணி புரியும் தோழனோ,
ஏன்நம் சொந்தங்களோ
எவரையும் அறிய இனம் புரிய
அவர்களை நேர் நின்று களம்காண
தைரிய லட்சுமி நம்முடன் கலக்க வேண்டுமடி
நம் கை நகமே நம்கூ ர் ஆயுதமடி
இதை விட பெரிய ஆயுதம் வேண்டுமோ?
நம் ஆயுதத்தை கண்டு எதிரிகள் மிரளட்டும்

கள்ள உறவிற்காக காமுகனுடன் கூடி
கட்டிய கணவணனை கொல்லும்
அசட்டு தைரியம் நம் இனத்திற்கு தேவை இல்லையடி
ஆனால் ஹாசினியாய்,நந்தினியாய்,நிர்பயாவாய் பாலியல்
பலாத்காரத்திற்கு ஆளாகி உயிர் விடும் அபலையா
ஒருபோதும் நாம் நிற்க வேண்டாம் மடி

மாங்கல்யத்திக்கும் ,பூவுக்கும் ,பொட்டுக்கும்
மாப்பிள்ளை விலை வைத்தால்
அவன் கேட்டதை தந்து மணமேடை ஏற வேண்டாம் மடி
சீதனம் கொடுத்தா சீராட வேண்டும்
அவ்வளவு சீப் ஆகிவிட்டோமா நாம்

நம்மை விரட்டி விரட்டி காதலித்து விட்டு
பின் ஜாதி சொல்லி அவன் குடும்பம் நம்மை ஜாதி சொல்லி
ஒதுக்கும் போது
தட்டி கேட்க்க வக்கில்லாதவன் தடம்
மாறினால்
காதலுக்காக கண்ஐ கசக்கும்
பைத்தியமாய் எங்களை பார்க்கதேடா
நாங்கள் ஜாதி மறுத்த பாரதியின் வர்க்க மடா
ஜாதிக்காக மனம் மாறும் நீ பச்சோந்தி யடா
அர்த்தமில்லா இந்த உலகத்திலேய காதலுக்கு
ஏதடா ஜாதி?

நீ ஏன்ன ஏன்னை மறுப்பது ? நான் உன்னை
மறுக்கிரேன் ஏன்று ஆணவத்துடன் கூறடி

திமிரும் ஆணவமும் பெண்ணின் இரு கண்கள்
ஆணவத்திலர்ந்து தான் தைரியம் பிறக்கும்
திமிரிலிருந்து தான் நம் பாதுகாப்பு பிறக்கும்

பூவை விட மென்மை யானவர்கள் நாமடி
பூகம்பத்தை விடவும் கடுமை யானவர்கள் நாமடி
மாற்றத்திற்க்கு தைரியம் மாத்திரம் இருந்தால். போதுமடி
மாற்றங்கள் நம் வெற்றியின் இரகசியம்
வெற்றி காண நம்மில் தயக்கம் உண்டா அடி
நம் இனம் வலுவற்ற இனம் என்று காலம் காலமாய் நம்மாய் சீண்டும்
நயவஞ்சக நரிகளை எட்டி
உதையடி உந்தன் அறிவால்
அடுப்படி முதல் ஆகாயம் வரை
நாங்கள் எந்த மாற்றத்திற்கும்
சம்மதமே என சத்தம் இட்டு சொல்லடி
..
நம் பாதையில் நாமும் முன்னோக்கி செல்வோம்
நமக்கு தடை போட யாரும் இல்லை ....
நம் இயலாமையை தூக்கி எறி.வோம் ..
நம்மால் முடியும் ....
நிச்சயம் நாம் சாதிப்போம் ....
ஏன் என்றால் நாம் ஒரு பெண் ....

பெண்ணால் முடியும் ...
பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம் ......

நான் ஒரு பெண் என்று கர்வமாக சொல்லிக்கொள்கிறேன்

எழுதியவர் : (8-Mar-17, 2:04 pm)
சேர்த்தது : ANURAJU
பார்வை : 154

மேலே