அசடு

விரலில் சிக்கிய தடியை வருடி
புன்னைகையுடன் தூரத்தில் என்னவனை - பார்த்த கணம் !

கட்டி அணைக்க தோன்றும்
எண்ணத்தை மனதில் புதைத்து !
Hai ! என்று சொல்லி close up
விளம்பரம் துவங்க!
"சொல்லுடி லூசு ... " வார்த்தைக்கு அசடு வழியும்
பெண்ணே ! நான் !

கவிதையாய் பேச நினைத்தும்
வார்த்தைகள் மறந்து போக!
Nothing! என்று சொல்லி stupid என
தலையை தட்டிக்கொண்டு !
என்னடி...! வார்த்தைக்கு வெக்கத்துடன் சிரிக்கும்
பெண்ணே ! நான் !

கண்கள் நேராக பார்க்கையில்
இதயம் படப் படத் துடிக்க !
let's go என்று சொல்லி kerchief-ஆல்
முகத்தைத் துடைக்க !
" ம்ம்ம்ம் " என்ற வார்த்தைக்கு ரசிக்கும்
பெண்ணே! நான் !

கையை பிடிக்க நினைத்தும்
விரல்களை தயக்கத்துடன் மூட!
wait என்று சொல்லி hyyo என
விரல் நகம் கடிக்க !
"வாடி " என்ற வார்த்தைக்கு செவிசாய்க்கும்
பெண்ணே! நான் !

பிரிய சிறிதும் மனமில்லாமல்
உன் பின் மெல்ல நடக்க !
don't go என்று சொல்லி hmmm என
வருந்தும் சிணுங்க!
Love you என்ற வார்த்தைக்கு எதிர்ப் பார்க்கும்
பெண்ணே ! நான் !

எழுதியவர் : சபீனா பேகம் (8-Mar-17, 3:19 pm)
Tanglish : asatu
பார்வை : 126

மேலே