மதிப்பிற்கு_உரியவள்_பெண்
#மகளிர்_தின_வாழ்த்துக்கள்
பெண்மையின் உண்மை குணத்தை
3 சொற்களால் விளக்கியுள்ளேன்
30 வரிகளில் எழுதியுள்ளேன்...!!
என் #மதிப்பிற்கும்!!!
என் #அன்பிற்குரிய!!!
அனைத்து பெண்களுக்கும்
இந்த கவிதை சமர்ப்பணம் !!!
#மதிப்பிற்கு_உரியவள்_பெண்
ஆணின் துணையாக ஆக்கப்பட்டவள்...!
#அன்னை ஸ்தானத்திற்கு உரியவள்...!
கடவுள் அன்பின் உருவானவள்...!
கணவனின் அன்பிற்கு அடிபனிபவள்...!
குடும்ப ஒற்றுமையை நேசிப்பவள்...!
குழந்தைகளின் ஏக்கத்தை அறிபவள்...!
பிறந்தவீட்டின் பெருமையை காப்பவள்...!
புகுவீட்டின் கௌரவத்தை பேணுபவள்...!
மென்மையின் தன்மை உடையவள்...!
சுயமுடிவுகளை என்றும் விரும்புபவள்...!
நாடாளும் திறம் பெற்றவள்...!
வீடாளும் வரம் வாங்கியவள்...!
இறைவனின் இளமனம் படைத்தவள்...!
ஒழுக்கத்தின் உருவாய் விளங்குபவள்...!
ஆண்மகனின் பின் பலமானவள்...!
#அக்கா அந்தஸ்திற்கு அணியானவள்...!
அவளே இரண்டாம் அன்னையாவாள்...!
தமையனின் பாச #தங்கையுமவள்...!
அவனிடம் செல்லசண்டை போடுபவள்...!
பண்பாடு பாரம்பரியம் பாதுகாப்பவள்...!
துன்பத்தை தகர்க்கும் திறமுடையவள்...!
பயத்தை போக்கும் கரமுடையவள்...!
பகையை அழிக்கும் குணமுடையவள்...!
பகைவர்க்கு இறங்கும் மனமுடையவள்...!
கற்பின் நெறி தவறாதவள்...!
மானங்காக்க உயிர் துறப்பவள்...!
தியாகத்தின் சின்னமாய் திகழ்பவள்...!
சினத்தில் சிகரத்தை எட்டுபவள்...!
#மதிப்பிற்குரிய மூன்று எழுத்து...!
அதுவே #பெண்மையின் பெரும் சிறப்பு...!