தூரிகை வரையாத ஓவியம் - புதுக்கவிதை

தூரிகை வரையாத
ஓவியமாய் என்னுள்ளே !
வண்ணக்கோலம்
போடுகின்ற உன்
எழிலழகு என்னைக்
கொல்லுதடி ! அறிவாயோ !


நீ ... கைகளால் போடும்
கோலம் என்னைக்கவரும் !
வாசலிலே பூசணிப்பூ
வைத்தாய் !! நான் .. பார்த்திடவே !
கோலங்கள் கலைந்திடுமா !
கோடுகள் நிலைத்திடுமா !


அன்பே !!!!!!!
காதல் .....
கலைந்து போகும்
கண்ணோரக் கனவல்ல !!!!!
இருமனங்களின்
வாடாத மலர்ச்சி !!!

கண நேரத்தில் களைத்து...
தனித்துப் போகும்
உடலின்பச் சுகமல்ல !!!!!
இரு உள்ளங்களின் ஐக்கியம் !

கண்ணே !
இது இருமனங்களின்
கூட்டுப் பாடல் !
நல்லிதயங்களின்
நாட்டுப் பாடல் !

இது உறங்கத்
தலையணைக் கேட்காது
அழகு பார்க்காது
உள்ளம் பார்க்கும்
உன்னதக் கலை ஓவியம் !
இது வரைய தூரிகை
தேவையில்லை !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Mar-17, 7:50 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 148

மேலே