காதலுடன் ஒரு காதல்
விழி இரண்டும் நீ எனக்கு
பார்வையென நான் உனக்கு
வரிகள் என நீ எனக்கு
மொழிகள் என நான் உனக்கு
மூச்சென நீ எனக்கு
தென்றலென நான் உனக்கு
உயிரென நீ எனக்கு
உடல் என நான் உனக்கு
ஆசை மொழி பேசி தீர்த்தால்
மௌனம் கூட மிச்சம் உண்டு
காதலும் தீர்ந்து போனால்
நினைவுகள் நீளும் இங்கு
காலை மாலை இரவு என
கலந்திருக்க நீ வேண்டும்
காமமற்ற வேளையிலும்
காதலுடன் நீ வேண்டும்
கோபமற்ற நிமிடங்கள்தான்
குறைவின்றி நீள வேண்டும்
மௌனம் மொழி பேசி தீர்க்க
வார்த்தைக்கெல்லாம் விடுப்பு வேண்டும்
ஆசையுடன் தோல் சாய
ஆவலுடன் நீ வேண்டும்
ஆயுள் கொஞ்சம் முடிந்தாலோ
உன் மடி மீது மரணம் வேண்டும்
மறு ஜென்மம் என்றாலோ
அப்பொழுதும் நீ வேண்டும்
ந.சத்யா