காதல் பறவை -- பல விகற்ப பஃறொடை வெண்பா --- மரபு கவிதை
காதல் பறவையோ காற்றினில் சுற்றியே
மோதல் மறந்துமே மோதியும் சண்டையும்
போடாது நெஞ்சம் பொதிந்துமே வாழ்கிறது .
மேடான பள்ளங்கள் மேதினியில் வந்தாலும்
காடெல்லாம் சுற்றிக் கவலை விடுத்துமே
வீடெல்லாம் இன்பம் தரவும் விரைகிறது
கூண்டில் அடைக்காதீர் கூற்று .
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்