கொள்ளை அழகு கொஞ்ச தோணும் அழகு

கொள்ளை அழகு!
கொஞ்ச தோணும் அழகு!
மங்கை அவளை கண்டால்
மனமும் மாறும் அழகு!
 
அவள் சிரிப்பு அழகு!
சிரிக்க மறுத்தால் அழகு!
கோபம் அழகு!
கொஞ்சும் சிணுங்கல் அழகு!

அவளின் வெகுளி அழகு!
வெளியே நடந்தால் அழகு!
உதட்டை சுளித்தால் அழகு!
சுற்றி வந்தால் அழகு!
 
அவள் கடைக்கண் பார்வை அழகு!
பார்த்ததும், தலை கவிழ்ந்து
வெட்கம் கொண்டால், அழகு!

கண்ணக்குழி அழகு,
கவிதை பேசும்,
அவள் கண்கள் அழகு!
நெற்றிப் பொட்டு அழகு!
தெளிந்த பார்வை அழகு!

ஒய்யார நடை அழகு!
ஓயாமல் பேசும், அவள்
பேச்சும் அழகு!
அவள், கண் சிமிட்டல் அழகு!
மேகமும் மையல் கொள்ளும் ,
அவள் இதழ் அழகு!
 
நிலமும் பொறாமை கொள்ளும்,
அவளின் பொறுமை அழகு!
காற்றும் தோற்றுப் போகும்,
அவளின் மென்மை அழகு!

சந்திரனும் வெட்கம் கொள்ளும்,
அவளின் அமைதி அழகு!
நெருப்பும் மண்டியிடும்
அவளின் சினம் அழகு!

மழையும் மனதை பறிகொடுக்கும்
அவளின் மேனி அழகு!
கவிதையும் தோற்று போகும்
அவளின் பெயரும் அழகு!

அழகோ அழகு! அத்தனையும் அழகு!

எழுதியவர் : Sherish பிரபு (8-Mar-17, 9:25 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 10228

மேலே