கருவறை உறக்கம் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை

கருவறையில் உறங்கிடவும் கண்ணெனவே காத்திடுவாள்
அருமையான தாயவளே அன்பிற்கோர் சான்றாவாள்.
பெருமைபல பிறர்முன்னால் பேசிடுவாள் பெருமிதமாய்
தருகின்ற உதிரமுமே தாய்ப்பாலாம் கருவறையில் .


உறங்குன்ற சிசுவினுடை உணர்வான மூச்சினையும்
உறவாகி தன்னுள்ளே உயிராகக் கேட்டிடுவாள்
மறக்காது மழலையுமே மாசற்றக் காத்தலையும்
பிறக்கின்ற நாள்வரையும் பிள்ளையுமே உறங்கிடுமே !


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Mar-17, 12:18 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 60

மேலே