படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

இராணுவத் துப்பாக்கி
ஏந்த வேண்டிய கரங்களில்
ஊதுகுழாய் !

தூக்கி ஏறி
ஊதுகுழாய்
ஏந்திடு எழுதுகோல் !

அடுப்பறையில்
முடங்கியது போதும்
அகிலம் காண வா !


பெண் விமானிகள்
உலகம் சுற்றிய காலமிது
வா புதுமைப் பெண்ணே !

வேண்டாம் அடுப்படி
வேண்டும் கல்வி
கல்லூரிக்குப் புறப்படு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Mar-17, 3:32 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 94

மேலே