கடவுளுக்கு குழப்பம்
இறைவன் ஒருவன்
உண்டென்றால்,
உலகில் அனைவரும்
சமம் அன்றோ?
படைத்தல்,காத்தல்,
அழித்தல்,தான்
அவன் பணி என்றால்,
படைத்த பின் இவர்களை
ஏன் காக்க மறந்தான்?
தண்டிக்க தான் இவர்கள்
படைப்பு என்றால்
இவர்கள் செய்த குற்றம்
தான் என்ன?
தண்டிப்பது தான் அவன்
என்னம் என்றால்,
படைப்பதை நிறுத்தும்
எளிய வழியை
ஏன் மறந்தான்?
#sof_sekar