உயிரோடுதான் இருக்கிறேன்

உயிரோடுதான் இருக்கிறேன்.
பிணமாகவே நலமாகவே,
உயிரோடுதான் இருக்கிறேன்!

தனிமையின் சத்தம், செவிகளில்
வந்து, உரக்கவே குரல் எழுப்புதே!
இனிமைகள், தேடும் இதயமோ
பண்பலையாய், காற்றில் திரியுதே!

இனிய உளவாக இன்னாத கூறும்,
கனியும் நாட்களைக் கண்ணோடு சேர்க்கும்,
நட்பை எண்ணி ஏங்கி - தனியே
பறக்கும் பறவையானேன்!

மீசையும் தாடியும், முதிர்ந்த தோற்றமும்,
தாயின் அனலை எண்ணி, நாடி ஏங்கும் நொடி,
என் குழந்தைத்தனத்திடம் தோற்குதே!
மொத்தப் புரதம் கரைந்தொழுகி ஓடுதே!

என் சதையை மொய்க்க வேண்டாம்,
கை நகங்கள் பிய்க்க வேண்டாம்.
என் உறவுகள் வடித்ததும், கனவுகள் பறித்ததும்,
என்னுள் நானே சிறையடைந்தேனே.
வலியை உண்டே உயிர் வாழ்கிறேனே!
"உயிரோடுதான் இருக்கிறேன்"

எழுதியவர் : விக்னேஷ் ச (10-Mar-17, 12:16 pm)
பார்வை : 134

புதிய படைப்புகள்

மேலே