என்னைத் தேடி
என்னையுமே தேடினேனே
------ எங்கேதான் போனேனோ
உன்னுள்ளே இருக்கின்ற
------ உறவாடும் இதயத்தைச்
சின்னவளே நீயுந்தான்
------ சிதைத்துமே விடவேண்டாம்
உன்மொழியைக் கேட்டிடவே
------ உலகெங்கும் தேடிடுவேன் !
கண்ணீரும் கதைசொல்லும்
------ காவியமும் படைத்திடுமே
விண்ணுலகின் வியன்பொருளே
----- விரைந்துநீயும் வந்திடுவாய் .
எண்ணமெலாம் நீயன்றோ
------ என்னுயிரே வாடுகின்றேன்.
பண்பலவும் பாடிடுவேன்
------ பாசத்தால் தேடிடுவேன் .
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்